மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அக்னிபத் திட்டத்தின்கீழ், முப்படைகளில் பணியாற்றுவதற்கான வயது உச்சவரம்பு 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பல இடங்களில் ரெயில்களை மறித்தனர். பீகாரில் 2 ரெயில்களுக்கு தீவைக்கப்பட்டது. கல்வீச்சில் பெண் எம்.எல்.ஏ. காயமடைந்தார். இந்தநிலையில், அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. போராட்டம் வெடித்துள்ள நிலையில் 17.5 முதல் 21 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கே.பி.சுகுமார்

Leave a Reply