ஏற்காட்டில் இந்திய பேச்சு மற்றும் கேட்பியல் கூட்டமைப்பின் 4- ஆம் ஆண்டு அறிவியல் மாநாடு செப். 19,20,21 ஆகிய தேதிகளில் நடைப்பெற்று வருகிறது.
இந்த மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக பேரணி நடத்தப்பட்டது. பேரணி ஏற்காடு படகு இல்லத்தில் இருந்து அண்ணா பூங்கா வரை நடைப்பெற்றது. பேரணியை விநாயகா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் எழிலமுதன் துவக்கி வைத்தார். உடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர் மோகன் இருந்தார்.
பேரணியல் வாய்பேச இயலாதவர்கள், காது கேளாதோர் செய்து கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி வந்தனர். பேரணியில் 300-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
-நவீன் குமார்.