ஏற்காடு ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாமும், ஏற்காடு மலைப்பாதை சங்கத்தின் சார்பில் பொது மருத்துவ முகாமும் நடைப்பெற்றது.
ஏற்காடு ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஏற்காடு நாசரேத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
முகாமிற்கு ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி தலைமை தாங்கினார். அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மனோகர்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமிற்கு வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் கண்புரை, சர்கரை நோயால் கண்பார்வை இழந்தவர்கள், கண்அழுத்த நோய், கிட்ட பார்வை, தூரபார்வை, உள்ளிட்ட பலவேறு குறைபாடுகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
இம்முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. குறைபாடு உள்ளவர்களை தங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்தும் சென்றனர்.
மேலும், ஏற்காடு மலைப்பாதை சங்கமும், சேலம் சுரக்ஷா மருத்துவமனையும் இணைந்து ஏற்காட்டில் இலவச பொது மருத்துவ முகாம் ஏற்காடு சேர்வராய்ஸ் திரையரங்கத்தில் நடத்தினர்.
இம்முகாமிற்கு மலைப்பாதை சங்க நிர்வாகிகள் ஹரி, கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். சேர்வாய்ஸ் குழும நிர்வாக இயக்குனர் இளவரசி தேவதாஸ் முகாமிற்கு தலைமை தாங்கினார்.
இம்முகாமில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்கரை நோய், உள்ளிட்ட பரிசோதனைகளும், பெண்களுக்கான மலடு நீக்குதல், செயற்கை கருத்தரித்தல், பிரசவம், கர்ப்பபை கட்டி, கர்ப்பபை வாய், கருமுட்டை புற்றுநோய்க்கான பரிசோதனைகளும் பெண் மருத்துவர்கள் செய்தனர்.
இந்த முகாமில் 250 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 16 பேருக்கு அம்மா திட்டத்தன் கீழ் சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
-நவீன் குமார்.