குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் நேற்று நடைபெற்ற கட்சியின் ஆட்சிமன்ற குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ஜெ பி நட்டா, முதன்முறையாக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
64 வயதாகும் திரௌபதி முர்மு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஒடிசா மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் குடியரசுத் தலைவராக முர்மு பதவியேற்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட அவர், சமூகத்திற்கும் அடித்தட்டு மக்களுக்கும் சேவை செய்வதற்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு இன்று காலை ஒடிசா ரைராங்பூர் சிவன் கோவிலை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து வழிப்பட்டார்.
–எஸ்.சதிஸ் சர்மா