மரணப்பள்ளத்தை மூடுவதற்கு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

21.09 (2) 21.09 (1)திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு லெட்சுமிபுரம் இரண்டாவது தெருவில், மெயின்ரோட்டில் இருந்து தெருவிற்கு திரும்பும் இடத்தில், இடது புறம் சாலை ஓரத்தில் மிகப் பெரிய பள்ளம் உள்ளது. இது மாநகராட்சி ஊழியர்களால் தோண்டப்பட்ட பள்ளமாகும். இது மூடப்படாமல் திறந்த நிலையிலேயே பல மாதங்களாக இருந்து வருகிறது.

இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் மற்றும் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கும் இப்பள்ளம் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது.

இப்பகுதிக்கு வரும் நபர்கள் பல பேர் தடுமாறி இப்பள்ளத்தில் விழுந்து காயம்பட்டு உள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் இந்த மரணப்பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமா?

-கே.பி.சுகுமார்.