குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோர் முன்னிலையில் அவர் மனுதாக்கல் செய்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
–எஸ்.சதிஸ் சர்மா