நாடு முழுவதும் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் . அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம், கெவாடியாவில் மாநிலங்களின் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள இரண்டு நாள் மாநாட்டிற்கு தலைமை வகித்து அவர் பேசினார்.விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலக அரங்கில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 10 இடங்களுக்குள்ளாக இந்தியா இடம்பெறுவதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டார்.
–திவாஹர்