ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை நேற்று புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.
மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகவும், இதனை களைவதற்கு உதவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.தற்போது பல்வேறு துறைகளை ஒரே அதிகாரி கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று ஜிதேந்திர சிங் உறுதியளித்தார்.
–எம்.பிரபாகரன்