அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட ஆண்டு திட்டமிடல்!

ye2209P3தேசிய கல்வி திட்டமிடுதல் பல்கலைகழகம் (என்.யு.இ.பி.ஏ) அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் ஆண்டு செயல் திட்டம் வடிவமைப்பதில் உள்ள தொழில்நுட்ப தகவல்களை மாநிலம் முழுமையிலும் இருந்து வந்துள்ள 35 கல்வியாளர்களுக்கு விளக்கி, ”தமிழக இடைநிலை கல்வி திட்டம்” முதன்மையானதாக மாற்ற 5 நாள் பணிமனை திட்டமிடப்படுகிறது.

இம்முகாமை (என்.யு.பி.ஏ) பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர்.ஜாய்டி, டாக்டர்.பிஸ்வால், டாக்டர்.மொஹன்டி ஆகியோர் வருகை தந்து பேராசிரியர்களை வழிநடத்துகின்றனர்.

மேலும், திட்டபணியை மாநில திட்ட இயக்கத்திலிருந்து வந்துள்ள நிர்வாக அலுவலர் கே.முத்துசாமி, நிதி நிர்வாக அலுவலர் பஷிர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

-நவீன் குமார்.