சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போதைப் பொருள் பயன்பாடில்லாத இந்தியா இயக்கத்தின் சார்பில் ஓட்டம்.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போதைப் பொருள் பயன்பாடில்லாத இந்தியா இயக்கத்தின் சார்பிலான ஓட்டத்திற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஏற்பாடு செய்தது.   புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற ஓட்டத்திற்கு சுகாதார உடல் திறன் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. 

இளைஞர்கள் உள்ளிட்டவர்களை போதைப் பொருள் உபயோகத்திலிருந்து காப்பது, நமது நாட்டை போதைப் பொருள் இல்லாத நாடாக திகழச் செய்வது போன்ற உறுதிமொழிகளை இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஏற்றுக் கொண்டனர். உறுதிமொழிக்கு பிறகு போதைப் பொருளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான ஓட்டத்தை  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் தொடங்கிவைத்தார். போதைப் பொருள் உபயோகம் மற்றும் கடத்தலுக்கு எதிராக சர்வதேச தினம் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  நாட்டில் 272 மாவட்டங்களில் போதைப் பொருள் பயன்பாடில்லாத இந்தியா இயக்கம் நடைபெற்று வருகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply