நதிகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!- தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா இன்று நடைபெற்றது. இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்நியாசிகள் பங்கேற்றுள்ளனர். அதன் பிறகு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது, நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 2016 -ல் பிரதமர் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை துவக்கி வைத்தார்.

ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள். வரும் 2025 க்குள் 100 மெகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால் 2021 செப்டம்பர் மாதத்திலே அந்த இலக்கை அடைந்து விட்டோம். இந்தியா 2030 க்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள் இது தான் சனாதனம். பூமி ஒரு ஆதாரமாக பார்க்க கூடாது. அதை வணங்க வேண்டும். என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து நீரை வழிபட்டுள்ளேன். ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply