மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திரசிங், நார்வே நாட்டின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான அமைச்சர் எஸ்பன் பார்த் ஈடே –யை இன்று சந்தித்து உரையாடினார்.
ஐக்கிய நாடுகள் சார்பில் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பெனில் நடைபெற்று வரும் பெருங்கடல்சார் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜிதேந்திரசிங், மாநாட்டின் ஒரு பகுதியாக நார்வே அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதித்தார்.
இதில் குறிப்பாக நீல பொருளாதாரம், ஒருங்கிணைந்த பெருங்கடல் மேலாண்மை, கடல்சார் சுற்றுச்சூழல் பாதிப்புகள், பசுமை கப்பல் போக்குவரத்து கடல்சார் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தியா – நார்வே இடையேயான சிறப்பு பணிக்குழுக்களின் பேச்சுவார்த்தை புதுதில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், தற்போதைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எம்.பிரபாகரன்