மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக இன்று நடைபெற்ற 14-வது கூட்டுக்குழு கூட்டத்திற்கு, இந்திய தரப்பில், ரயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் கூட்டாக தலைமை வகித்தார். ஜப்பானிய தரப்பில் அந்நாட்டு பிரதமரின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் மோரி மசாஃபுமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தின் போது, திட்டப்பணியின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன் வீடியோ படமும் திரையிடப்பட்டது. மேலும், நிதி வழங்குதல், ஒப்பந்தப்பணிகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரயில்பாதை திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க உறுதிபூண்டுள்ள ஜப்பான், கடனுதவியோடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புகளையும் வழங்கவுள்ளது. திட்டத்தின் ஒட்டுமொத்த நலன்கருதி, பிரதமரின் கருத்துப்படி, ஒரு திட்டம்- ஒரே குழு என்ற அடிப்படையில் பணியாற்ற இருநாடுகளும் ஒப்புகொண்டன.
எம்.பிரபாகரன்