கர்நாடகாவில் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.இன்று பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த அவர், இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றார்.இந்தப் பணியாளர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இதன் அடிப்படையில் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் வழங்கப்படும் என்றும் பசவராஜ் பொம்மை கூறினார்
திவாஹர்