மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் வெற்றி பெற்றுள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டப்பேரவையில் 164 வாக்குகளை பெற்று மராட்டிய சபாநாயகராக ராகுல் நார்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜன் செல்வி தோல்வியுற்றார்.
மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. கடந்த புதன்கிழமை உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து மறுநாளே புதிய அரசு அமைந்தது. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவி ஏற்றார். பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார். இதன்படி பா.ஜனதா ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி அணி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது
எஸ்.சதிஸ் சர்மா