கத்தார் நாட்டு கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் கார்த்திகேயன் 21.09.2014 அன்று உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த மீனவர் கார்த்திகேயனின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த கார்த்திகேயன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு நின்று விடாமல் இதுக்குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோதிக்கு விரிவானக் கடிதம் ஒன்றையும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று (23.09.2014) அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், கத்தார் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் கார்த்திகேயன் உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை இந்திய தூதரகத்தின் மூலம் உடனே எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் உள்ள 3 மீனவர்களையும் தாமதமின்றி உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றுத்தரவேண்டும் எனவும், பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கத்தார் நாட்டு கடலோர காவல் படை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழ் மீனவனுக்கு ஜெ.ஜெயலலிதா என்ன செய்தார்? ரூ.5 லட்சம் இழப்பீடு அவ்வளவுதான். நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதவில்லை. முஸ்லிம்கள் என்பதால் கோபம்? என்று பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய் சொல்லியே வாழ்ந்து வரும் சர்வதேச மூத்த தரகர் சுப்பிரமணியன் சுவாமி தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் தனது பொய், பித்தலாட்டத்தை இன்று (23.09.2014) அரங்கேற்றியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, சுப்பிரமணியன் சுவாமி மீது இதுவரை 5 அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளார். ஆனாலும், சர்வதேச மூத்த தரகர் சுப்பிரமணியன் சுவாமி இதுவரை திருந்தியதாக தெரியவில்லை.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in