ஏற்காடு, பட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கவுண்டன், இவரது தோட்டத்தில் பட்டி அமைத்து 16 ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த பட்டிக்கு எப்போதும் அவரது மகன் தனபால் தான் காவலுக்கு செல்வார்.
இந்நிலையில் 23.09.2014 அன்று கனமழை பெய்ததால் இவர் காவலுக்கு செல்லவில்லை. மறுநாள் காலை சென்று பட்டியை பார்த்தபோது, இடித் தாக்கியதில் பட்டியில் 7 ஆடுகள் இறந்து கிடந்தது. அதில் ஒரு ஆடு சினை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கருவில் இருந்த 2 ஆட்டுக்குட்டிகளும் இறந்துள்ளது.
இதுக்குறித்து அந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரிடம் தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் வாசுகி, அந்த ஆடுகளை சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தார். பின்னர் ஆடுகள் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
-நவீன் குமார்.