தமிழகத்தில் 152 கோடி ரூபாய் மதிப்பிலான 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2021-22-ம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறையின் மானியக்கோரிக்கையின்போது, திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், ஏரியூர், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதேபோன்று, 2022-23-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மணப்பாறை, செஞ்சி, தளி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply