மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், வடக்கு மண்டல குழுமத்தின் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.ராஜஸ்தான், ஹரியானா, ஹிமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் தில்லி முதலமைச்சர்களும், ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.உள்நாட்டு பாதுகாப்பு, இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள மாநிலங்களுக்கு இடையேயான எல்லை நிர்வாகம், சாலை போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.நதிநீர் பகிர்வு மற்றும் மின்விநியோகம் தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்படவுள்ளது.
திவாஹர்