மேற்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங்கை பிரேசில் நாட்டின் கடற்படையின் தொழிலக தயாரிப்பு & பொறியியல் துறை இயக்குனர் வைஸ் அட்மிரல் லிபரல் இனியோ ஸான்லெட்டோ தலைமையிலான கடற்படை குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு & நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பம், மேக் இன் இந்தியா, கடற்படைகளுக்கு இடையேயான தொழில்முறை ஒத்துழைப்பிற்கான முன்முயற்சிகள் உட்பட பல்வேறு கடற்படை சார்ந்த விஷயங்கள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விவாதித்தனர். இந்த இரண்டு நாட்கள் பயணத்தில் இந்திய அதிகாரிகளை சந்தித்து, நீர்மூழ்கி கப்பல்கள் பராமரிப்பு குறித்து விரிவாக தெரிந்துக் கொள்ள உள்ள பிரேசில் வீரரகள், மும்பையில் உள்ள மஸாகன் கப்பல் கட்டும் தளம் மற்றும் கல்வாரி நீர்மூழ்கி கப்பலை பார்வையிட உள்ளனர்.
எம்.பிரபாகரன்