நாசா விண்வெளி அமைப்பு விண்ணுக்கு அனுப்பியுள்ள JAMES வெப் அதிநவீன தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய பல்வேறு அண்டங்களின் கண்கவர் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டன.

நாசா விண்வெளி அமைப்பு விண்ணுக்கு அனுப்பியுள்ள JAMES வெப் அதிநவீன தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய பல்வேறு அண்டங்களின் கண்கவர் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டன.பிரபஞ்சத்தின் மிக ஆழமான பகுதிகளை தமது அகச்சிவப்பு கதிர்களால் ஊடுருவி அரிய புகைப்படங்களை இவ்விண்வெளி தொலைநோக்கி எடுத்து அனுப்பியுள்ளது.

இவற்றை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியிட்டார்.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சென்ற ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன தொலைநோக்கி தற்போது விண்ணில் வலம் வந்து கொண்டிருக்கும் புகழ்மிக்க ஹப்பிள் தொலைநோக்கிக்கு மாற்றாக உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.தற்போது வெளியிடப்பட்டுள்ள அதன் படங்கள் வோலான்ஸ் எனப்படும் நட்சத்திர திரள் கூட்டத்தின் தென் அரைக்கோளமாகும். இது 460 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ளவையாகும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply