மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி, நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை தேசத்தின் வளர்ச்சி, சுயசார்பு மற்றும் பிரதமரின் தொலைநோக்கான தற்சார்பு இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பேசினார்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறையின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் மத்திய அமைச்சர் இவ்வாறு பேசினார். மேலும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்த அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக உள்ளது என்றும் தெரிவித்தார். தற்போதைய அரசு நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறையை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு முழுமையாக பயன்படுத்தி வருகிறது என்றார். இந்த நிகழ்வில் நிலக்கரி மற்றும் சுரங்கங்கள், ரயில்வே துறை இணையமைச்சர் திரு. ராவ்சாஹிப் பாட்டீல் தன்வே, நிலக்கரி துறை செயலர் திரு. அனில்குமார் ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திவாஹர்