நவீன ஆடை வடிவமைப்பில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்களிப்பு மதிப்புமிக்கதாக இருக்கும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் தேசிய நவீன ஆடைகள் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்நிறுவனத்தில் பயின்று வெளிவரும் மாணவர்கள் ஆடை வடிவமைப்பில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – அவர்களுக்கு கல்வி அளிப்போம் திட்டத்திற்கு ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உயர் முன்னுரிமை அளித்து வருவதாக திரு பியூஷ்கோயல் குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்