அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கும் வகையில், கட்டுமான நிறுவனங்கள் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற இந்திய கட்டுமான உபகரண உற்பத்தியாளர் சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.தொழில்நுட்பம் அடிப்படையிலான தரமான உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் கூறினார்.மாசு அளவை குறைக்கும் வகையிலும், எரிபொருள் செலவை சேமிக்கும் வகையிலும் மாற்று அடிப்படையிலான எரிபொருள் பயன்பாட்டை கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை கட்கரி வலியுறுத்தினார்.
திவாஹர்