குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டி போடுகின்றனர்.

இன்று காலை 10 மணி முதல் தொடங்கி வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குப்பதிவு சீட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிற வாக்கு பதிவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்காக வைக்கபட்டுள்ள வாக்குப்பெட்டியில் தனது வாக்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply