திராஸ் (லடாக்) வரை கார்கில் போர் நினைவுதின சைக்கிள் பேரணி புதுதில்லியிருந்து கொடியசைத்து தொடங்கி வைப்பு.

1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போர் வெற்றியின் 23-ம் ஆண்டை நினைவுகூரும் விதமாகவும், ‘சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவை’க் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகவும், இந்திய ராணுவம், புதுதில்லியிருந்து திராஸ் (லடாக்) எல்லையிலுள்ள கார்கில் போர் நினைவுச் சின்னம் வரை மோட்டார் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. 18 ஜூலை 2022 அன்று, புதுதில்லியிலுள்ள போர் நினைவகத்திலிருந்து 30 பேர் கொண்ட சைக்கிள் பேரணியை, ராணுவத் துணைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த 30 பேர் குழுவினர், இந்திய ராணுவத்தின் வீரம், துணிச்சல், சாகசம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் மூலம் கார்கில் போர் வெற்றியை நினைவுப்படுத்தும் விதமாக ஹரியானா, பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள் பேரணி, 26 ஜூலை 2022 அன்று திராஸிலுள்ளகார்கில் போர் நினைவுச் சின்னத்தில் நிறைவடையும். இரு குழுவினரா செல்லும் இவர்கள், ஜோஹிலா பாஸ் மற்றும் ரோஹ்தாங் பாஸ் ஆகிய பகுதிகள் வழியாக முறையே, 1400 கிலோ மீட்டர் மற்றும் 1700 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறது. கடினமான பாதைகள் வழியாக, உயரமான மலைப்பாதைகளில் மோட்டார் சைக்கிள் பேரணி குழுவினர் பயணம் செய்யவுள்ளனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply