குடிமைப்பணி பயிற்சி மையங்களுக்கான தேசிய தர நிர்ணயக் கட்டமைப்பை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், இந்த சிறப்பு கட்டமைப்பை உலகிலேயே முதல் நாடாக இந்தியா உருவாக்கியுள்ளது என்றும், விரைவில் உலக அளவில் இந்தியா இதில் முன்மாதிரியாக விளங்கும் என்று நம்புவதாகக் கூறினார். இந்நிகழ்ச்சியில் 25 மத்திய பயிற்சி நிறுவனங்கள், 33 மாநில அளவிலான நிர்வாக பயிற்சி நிறுவனங்கள் மற்றும் குடிமைப்பணி பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட 103 நிறுவனத்தினர் கலந்துகொண்டனர். உயர்கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தர நிர்ணயம் இருந்துவரும் நிலையில், முதன் முறையாக பயிற்சி நிறுவனங்களுக்கும் தர நிர்ணய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்
https://www.facebook.com/100005327616302/videos/712400126532432/