சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கிலேயே வரிவிகிதங்கள் உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கிலேயே வரிவிகிதங்கள் உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பல கட்டங்களாக அதிகாரிகள் நிலையிலும், அமைச்சர்கள் குழுவிலும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், ஜி எஸ் டி கவுன்சில் இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். வரி உயர்வுக்கு ஜி எஸ் டி கவுன்சிலில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் கவுன்சில் முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply