நாட்டின் 15 வது குடியரசு தலைவராக ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

நாட்டின் 15 வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி என்னும் சிறப்பை அவர் பெற்றுள்ளார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோதி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரும் 25-ல் திரௌபதி முர்மு இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார்.

இந்தியாவின் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15 வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இதில் மொத்தமுள்ள 771 எம்.பி.,க்களில் 763 பேரும், 4,025 எம்எல்ஏ.,க்களில் 3,991 பேரும் ஓட்டளித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து மாநில வாரியாக எம்எல்ஏ.,க்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் போது தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த நிலையில் முடிவில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவு வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தோல்வியடைந்தார்.

இதையடுத்து நாட்டின் 15 வது குடியரசு தலைவராகிறார் திரௌபதி முர்மு. அவருக்கு பிரதமர் நரேந்திர மோதி உட்பட, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,பிரமுகர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply