சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற இயலாத மாணவர்கள் வருத்தம் கொள்ள தேவையில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார்.
இணைய தளத்தில் இக்கருத்தை பதிவு செய்துள்ள அவர், மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
எம்.பிரபாகரன்