ஜெ.ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை, 100 கோடி அபாரதம்! நீதித்துறையின் கோட்பாடுகளை நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா மீறி உள்ளார்: வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கண்டனம்!

Ramjeth Malaani

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

john micheal kunha

நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா

இதுகுறித்து அவர் கூறும்போது, ”ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. அபாராதம் விதித்ததில் நீதித்துறையின் கோட்பாடுகளை ஜான் மைக்கேல் குன்ஹா மீறி உள்ளார். ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை.

ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் வேண்டுமானால் இந்த தீர்ப்பை ஏற்கலாம். ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்க்கிறேன்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆழமாக பரிசீலிக்க வேண்டி உள்ளது” என்று கூறி உள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in