தேசியக் கொடியை பறக்க விடுவதற்கான நெறிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தேசியக் கொடியை, வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் பறக்கவிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.முன்னதாக, காலை சூரிய உதயம் முதல் மாலையில் சூரிய அஸ்தமனம் வரை தேசியக் கொடியை பறக்கவிடலாம் என்று விதிமுறைகளில் இருந்தது.கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, பாலிஸ்டர் துணியிலும் தேசியக் கொடியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
எஸ்.சதிஸ் சர்மா