பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யும் திட்டம் உள்ளதா?-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி.

அ) 2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக அரசு ஒப்புதல் அளித்துள்ளதா?

(ஆ) அப்படியானால், 40 ஆண்டுகளில் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

(இ) ஓய்வூதியத்திற்கான நிதியைச் சேமிப்பதற்கான ஒரே வழி வருங்கால வைப்பு நிதி மட்டுமே என்பதால், தொழிலாளர் வர்க்கத்தால் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதா?
(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்யுமா?

(உ) இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்ன?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான இணை அமைச்சர் ராமே°வர் டெலி அவர்கள் 21.07.2022 அன்று அளித்துள்ள பதில்:

(அ) முதல் (உ): பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 1952 இன் பாரா 60(1) விதிகளின்படி, பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒவ்வொரு பணியாளரின் கணக்கில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தில் வரவு வைக்கப்படும்.

மத்திய வைப்பு நிதி காப்புக் குழு (CBT), பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF)யுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் அதன் முதலீடுகளில் இருந்து பெறும் வருமானத்தைப் பொறுத்தது. வருங்கால வைப்பு நிதித் திட்டம், 1952 இன் படி மட்டுமே அத்தகைய வருமானங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மத்திய வைப்பு நிதி காப்புக் குழு, பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியத்தில் 8.10 சதவீத வட்டி விகிதத்தை 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கு, பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட,பொது வருங்கால வைப்பு நிதி 7.10%, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 7.40%, சுகன்யா சம்ரித்தி நிதித் திட்டம் 7.60% போன்ற திட்டங்களை ஒப்பிடும்போது, பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகம்.

2021-2022 ஆம் நிதி ஆண்டிற்கான பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தை 8.10% மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply