கோவில்பட்டி அருகே ஊத்துபட்டியில் ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுப்புற சுகாதாரப் பாதுகாப்பை வலியுறுத்தி 500 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும்; விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவன உறுப்பினர் வே.செண்பகராஜ் வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவன நிறுவனர் க.கண்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவன மேலாளர் எல்.மைக்கேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் பொருளாளர் அரிமா.ஆர்.எட்டப்பன் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், மற்றும் பரிசுகளை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோவில் அரிமா சங்கத்தின் பட்டயத்தலைவர் அரிமா.ஜி.முருகேசன், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் முருகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கனகசபாபதி, மணி, கணபதி, மகாராஜன், ராஜ், சண்முகராஜ், கலைச்செல்வன், பாப்பையா, அ.கண்ணன், பரமசிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அழகம்மாள் நன்றியுரை வழங்கினார். முன்னதாக விழா ஏற்பாடுகளை ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவனம் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
-கோ.சரவணக்குமார்.