பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது இதனைத் தெரிவித்த அவர், பாக்கெட் இன்றி தயிர், லஸ்ஸி போன்ற இதர பால் பொருட்களுக்கும் வரி விதிக்கப்படவில்லை என்றார்.பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் பால் பொருட்களுக்குத்தான் 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த குழுமத்தில் மாநில அரசுகளும் இடம்பெற்றிருப்பதை நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.
எஸ்.சதிஸ் சர்மா