தமிழகத்தில் புதிய முதலமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரசக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிக்கைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார். அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார்.
இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார். இதற்கான செய்திக்குறிப்பு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் கவர்னர் மாளிகையில் இன்று (29.09.2014) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரது கண்கள் கலங்கியது.
அவரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
1. நத்தம் விசுவநாதன்
2. வைத்திலிங்கம்
3. எடப்பாடி பழனிச்சாமி
4. பி.மோகன்
5. பா.வளர்மதி
6. பி.பழனியப்பன்
7.செல்லூர் கே.ராஜு
8. ஆர்.காமராஜ்
9. பி.தங்கமணி
10. வி.செந்தில்பாலாஜி
11. எம்.சி.சம்பத்
12. அக்ரி எஸ்.கிருஷ்ண மூர்த்தி
13. எஸ்.பி.வேலுமணி
14. டி.கே.எம்.சின்னையா
15. கோகுலஇந்திரா
16. சுந்தர்ராஜ்
17. செந்தூர்பாண்டியன்
18. எஸ்.பி.சண்முகநாதன்
19. என்.சுப்பிரமணியன்
20. ஜெயபால்
21. முக்கூர் என்.சுப்பிர மணியன்
22. ஆர்.பி.உதயகுமார்
23. கே.டி.ராஜேந்திர பாலாஜி
24. பி.வி.ரமணா
25. கே.சி.வீரமணி
26. ஆனந்தன்
27. தோப்பு வெங்கடா சலம்
28. பூனாட்சி
29. அப்துல்ரகீம்
30. விஜயபாஸ்கர்.
பதவியேற்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அனைவரும் சோகத்துடனே காணப்பட்டனர்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in