CRPF நிறுவன தினத்தையொட்டி அனைத்து மத்திய ரிசர்வ் காவல்படையினருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

சி ஆர் பி எஃப் நிறுவன தினத்தையொட்டி அனைத்து மத்திய ரிசர்வ் காவல்படையினர் மற்றும் அவர்தம் குடும்பததினருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய ரிசர்வ் காவல்படையினர் மிகுந்த தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும்தங்களது சேவையை நாட்டுக்கு அளித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.மனிதாபிமான அடிப்படையிலான சேவைகளையும் செய்வதில் மத்திய படையினரின் பங்கு போற்றுதலுக்குரியது என்று பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சி ஆர் பி எப் நிறுவன தினத்தையொட்டி மத்திய படையினருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.தன்னலமற்ற சேவையை நாட்டிற்கு அர்ப்பணிப்பதிலும், மிகுந்த தைரியத்தோடும், மன உறுதியோடும் தங்கள் கடமையை செய்வதிலும் மத்திய படையினரின் பங்கு பாராட்டுக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.

அர்ப்பணிப்பு உணர்வோடு நாட்டிற்காக பணியாற்றும் அவர்களது சேவைக்கு நாடு தலைவணங்குவதாகவும் திரு அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

திவாஹர்

Leave a Reply