மத்திய மின்துறை அமைச்சகம் “ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற விழாவை கொண்டாடுகிறது.

விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் “ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் – மின்சாரம் @2047” விழாவை ஜூலை 25-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை கொண்டாடுகிறது.

இவ்விழாவில் தேசிய மற்றும் மாநில அளவில் மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அத்துடன் 2047 ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டு நிறைவு பெறும் நிலையில், இத்துறையின் தொலைநோக்குப் பார்வை குறித்தும் எடுத்துரைக்கப்பட உள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply