கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளத்தில் உள்ள இந்து துவக்கப் பள்ளியில் பாரதியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் மற்றும் இந்து துவக்கப்பள்ளியும் இணைந்து நடத்திய பாரதியார் விருது வழங்கும் விழா 25.09.2014 அன்று மாலை 4.00 மணியளவில் ஜமீன் தேவர்குளத்தில் உள்ள இந்து துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து துவக்கப் பள்ளியின் உதவி பேராசிரியர் ஜெகதீஸ்வரி வரவேற்புரை வழங்கினார். ஜமீன் தேவர்குளம் பஞ்சாயத்து தலைவர் கமலா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் முருகானந்தம், இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் பேராசிரியர் கருத்தப்பாண்டி, கோவில் பட்டயத் தலைவர் அரிமா. ஜி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை கே.ஹேமலதா, ஆயுள் காப்பீட்டு கழக கோவில்பட்டி கிளை மேலாளர் எம்.சிவக்குமார் கலந்து கொண்டனர்.
பின்னர் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் சிறந்த ஓவியர் எஸ்.மோகன்குமார், இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் பேராசிரியர் கருத்தப்பாண்டி, தலைமை ஆசிரியை கே.ஹேமலதா, கசவன்று ஆர்.சி.நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ரா.மைக்கேல் என 11 ஆசிரியர்களுக்கும், நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் முருகானந்தம் ஆகியோர்க்கு பாரதியார் விருதும், கேடயமும் மற்றும் கசவன்று ஆர்.சி.நடுநிலைப் பள்ளியின் வெ.மகாலட்சுமி, ந.அரிகிருஷ்ணன், கோவில்பட்டி எவரெஸ்ட் மேல்நிலைப் பள்ளியின் யோகா சாதனை மாணவி பா.சக்திபிரபா, இலக்குமி மில் மேல்நிலைப் பள்ளியின் மோகன்ராஜ், பிருந்தாவன் கிட்ஸ் யுனிவெர்சிட்டி பள்ளியின் ரா.சாம்னாஸ்ரீ, விஸ்வகர்மா பள்ளியின் எஸ்.மாரியம்மாள் உள்பட 15 மாணவ,மாணவியர்களுக்கும் பாரதியார் விருதும் மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா வழங்கி பாராட்டினார்.
பின்னர் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் ஆர்.தேவி வாழ்த்துரை வழங்கினார். அய்யப்பசாமி நன்றியுரை வழங்கினார். இவ்விழா ஏற்பாடுகளை இந்து துவக்கப் பள்ளி நிர்வாகமும், ஊராட்சி மன்ற நிர்வாகமும் இணைந்து மிகச் சிறப்பாக செய்துள்ளது.
-கோ.சரவணக்குமார்.