சேலம் பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் வயது 35 இவர் ஏற்காட்டில் உள்ள லேக் ஃபாரசஸ்ட் எனும் ஹோட்டலின் பின் உள்ள பிளாட் ஒன்றில் கட்டிடம் கட்டும் பணி செய்து வருகிறார்.
இவருக்கு கலா எனும் மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளது. ஆனால், இவர் தற்போது மனைவியையும், குழந்தையும் பிரிந்து வாழ்கிறார்.
இவர் கடந்த 10 நாட்களாக விடுமுறையில் இருந்துள்ளார். விடுமுறை முடிந்து நேற்றுதான் வேலைக்கு ஏற்காடு வந்துள்ளார். நேற்று மாலை வேலை முடித்து மது அருந்தி விட்டு அருகில் உள்ள கிணற்று மேட்டில் தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து இறந்து விட்டார்.
அவர் உடன் கட்டிட வேலை செய்யும் தொழிலாளிகள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் சரவணின் பிரேதத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
-நவீன் குமார்.