காமன்வெல்த் விளையாட்டுகள் 2022-ல் தங்கப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் அசிந்தா ஷீலிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுகள் 2022-ல் தங்கப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் அசிந்தா ஷீலிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய அணியினர் புறப்பட்ட போது அசிந்தா ஷீலியுடனான கலந்துரையாடலையும் மோதி பகிர்ந்துள்ளார்.

 ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமைமிக்க அசிந்தா ஷீலி   தங்கப்பதக்கம் வென்றிருப்பது  மகிழ்ச்சியளித்தது. அமைதியான இயல்பு மற்றும் மனஉறுதிக்கு அவர் பெயர் பெற்றவர். தனது சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தவர். அவரது எதிர்கால முயற்சிகளுக்காக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.”

“காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான நமது அணி புறப்படுவதற்கு முன் அசிந்தா ஷீலியுடன் நான் கலந்துரையாடினேன். அவரது  தாய் மற்றும் சகோதரரின் ஆதரவு பெற்றது குறித்து நாங்கள் விவாதித்தோம். தற்போது பதக்கம் ஒன்றை வென்றுள்ள நிலையில் திரைப்படம் காண அவருக்கு  நேரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.”

திவாஹர்

Leave a Reply