கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து கோழிக்கோடு திரும்பிய 30 வயதான ஒருவருக்கு இந்நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி. வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதையடுத்து கேரளாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 அதிகரித்துள்ளது.
சி.கார்த்திகேயன்