தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அளிப்பதாக தரும் வாக்குறுதிகள் குறித்து பல தரப்பினரின் கருத்துக்களை பெற்று ஆய்வு செய்யும் ஒரு அமைப்பை ஏழு நாட்களுக்குள் உருவாக்க வேண்டும்! -உச்சநீதிமன்றம்

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அளிப்பதாக தரும் வாக்குறுதிகள் குறித்து பல தரப்பினரின் கருத்துக்களை பெற்று ஆய்வு செய்யும் ஒரு அமைப்பை ஏழு நாட்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்தி ஆயோக், நிதி ஆணையம், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கி பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு உருவாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவை இதுதொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திவாஹர்

Leave a Reply