பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:

“பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற @srikidambi, @satwiksairaj, @buss_reddy, @lakshya_sen, @Shettychirag04, த்ரீசா ஜாலி, ஆகர்ஷி காஷ்யப், @P9Ashwini, காயத்ரி கோபிசந்த் மற்றும் @Pvsindhu1 ஆகியோர் அடங்கிய இந்திய பேட்மின்டன் குழுவுக்கு வாழ்த்துகள். அவர்களது வெற்றியால் பெருமிதம் கொள்கிறேன்.”

“இந்தியாவில் அதிகம் கவர்ந்திழுக்கும் விளையாட்டுகளுள் பேட்மின்டனும் ஒன்று. காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது, இந்த விளையாட்டை மேலும் புகழ்பெறச் செய்வதோடு, அதிகமான மக்கள் வரும் காலங்களில் இந்த விளையாட்டில் ஈடுபடுவதை உறுதி செய்யும்.”

திவாஹர்

Leave a Reply