இந்தியா-மொரீஷியஸ் உயர் அதிகார வர்த்தகக் குழுவின் முதலாவது அமர்வு புதுதில்லியில் 2022 ஆகஸ்ட் 1 முதல் 3 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அரசின் தொழில் வர்த்தகத் துறை இணை செயலாளர் டாக்டர் ஸ்ரீகர் கே ரெட்டியும், மொரீஷியஸ் அரசின் வெளியுறவு அமைச்சக வர்த்தகக் கொள்கை இயக்குனர் நாராயண் தத் பூதூ-வும் கூட்டாக தலைமை தாங்கினர்.
2021 ஏப்ரல் 1 முதல் அமலில் உள்ள இந்தியா-மொரீஷியஸ் இடையேயான ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு ஒப்பந்தத்தின் பொதுவான செயல்பாடு மற்றும் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக உயர்நிலை கூட்டு வர்த்தகக் குழு அமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஆப்பிரிக்க நாடு ஒன்றுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள முதலாவது ஒப்பந்தமாகும்.
இருநாடுகளுக்கும் இடையே 2019-20-ல் 690.02 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2021-22-ல் 786.72 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருப்பதற்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
பரஸ்பர சுங்க நிர்வாக உதவி ஒப்பந்தம் செய்து கொள்ள இருதரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் விவாதத்தை தொடங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அடுத்த அமர்வை 2023-ல் நடத்துவதற்கு இருதரப்பும் முடிவு செய்துள்ளது.
எம்.பிரபாகரன்