உலகப் பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.

மாவட்டம் மேலூர் அருகே உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோயில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா இன்று (ஆக.4) தொடங்கி வரும் 14ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த பெருந்திருவிழாவிற்காக மூலஸ்தானத்திற்கு எதிரேயுள்ள தங்க கொடிமரத்தில் இன்று கருட கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக, சுந்தராஜபெருமாள், சுந்தரவல்லி தாயார் மற்றும் பூதேவி சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளப்பட்டு சிறப்பு அலங்கார ஆராதனை செய்யப்பட்டு, கொடிமரத்தில் விழாவிற்கான திருக்கொடி ஏற்றப்பட்டது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply