மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.8.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளம், மீன்விதை வளர்ப்பு தொட்டிகள், வண்ணமீன் வளர்ப்பு கூடம் மற்றும் பயிற்சி மையம், மீன் உலர் தளம், அலுவலகக் கட்டடங்கள், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை திறந்து வைத்தார்.

மீன் வளத்தை பாதுகாத்தல், நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

Leave a Reply