காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் 8வது நாளில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8ஆம் நாளில் 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று இந்திய மல்யுத்தக் குழு சிறப்பாகச் செயல்பட்டது. ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா, ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ போட்டியில் தீபக் புனியா, பெண்கள் 62 கிலோ ப்ரீஸ்டைல் போட்டியில் சாக்சி மாலிக் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ மல்யுத்தப் போட்டியில் அன்ஷு மாலிக் வெள்ளியும், பெண்கள் ஃப்ரீஸ்டைல் 68 கிலோ போட்டியில் திவ்யா கக்ரானும், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 125 கிலோ போட்டியில் மொஹித் கிரேவாலும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

குடியரசுத் தலைவர். திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் பதக்கம் வென்ற வீரர்களின் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply