கழுகுமலையில் மாவட்ட மகளிரணி சார்பில் ஜெ.ஜெயலலிதாவை பொய் வழக்கில் கர்நாடக நீதிமன்றம் வழங்கிய அநீதியை எதிர்த்தும் மற்றும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க-வினர் கருப்புத் துணி கட்டி உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் மாவட்ட மகளிரணி இணைச் செயலர் சண்முகத்தாய் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கடம்பூர்.செ.ராஜூ எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை கயத்தாறு ஒன்றிய பெருந்துணைத் தலைவர் எஸ்.வி.எஸ்.பி மாணிக்கராஜ் தொடங்கி வைத்தார். உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
-கோ.சரவணக்குமார்.