ஜெ.ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி கோவில்களில் அனைத்து சமய சிறப்பு கூட்டு பிரார்த்தனை!

DSCF8697 DSCF8716 DSCF8685DSCF8712அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி கோவில்பட்டியில் உள்ள கோவில்களில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் விடுதலை பெற வேண்டி, கோவில்பட்டி சாரதா திருமண மணடபத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அனைத்து சமய கூட்டு பிரார்த்தனை 01.10.2014 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கடம்பூர்.செ.ராஜூ எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். புனித வளனார் ஆலய உதவி பங்குதந்தை ஆரோக்கியராஜ், உபதேசியார் ஜஸ்டின் மிக்கேல்ராஜ், திவான் பாட்ஷா, செய்யது அலி சுல்தான், செண்பகராம பட்டர், சுப்பிரமணிய அய்யர், ஆகியோர் சிறப்பு கூட்டு பிரார்த்தனை, வழிபாடு நடத்தினர்.

முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன், அதிமுக நகரச் செயலாளர் சங்கரபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன், செல்வகுமார், நகரசபை துணை தலைவர் ராமர், நகர முன்னாள் செயலாளர்கள் முத்தையா, விஜயபாண்டியன், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ஈஸ்வரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சென்றனர். சாமிநாத பட்டர், செண்பகராம பட்டர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு, செக்கடி தெருவிலுள்ள டவுன் ஜாமியா பள்ளிவாசலுக்கு சென்றனர். மவுலவி அப்துல் ரசித் சிறப்பு தொழுகை நடத்தினார். பள்ளிவாசல் தலைவர் உதுமான் அலி, செயலாளர் அமானுல்லா கான், பொருளாளர் அம்ஜித் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்துக்கு சென்றனர். உதவி பங்குதந்தை ஆரோக்கியராஜ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அனைவரும் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

-கோ.சரவணக்குமார்.